சென்னை:
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில் சச்சின், சேவக், தோனி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டு, தமிழகத்தின் பத்ரிநாத், பிரவீண்குமார் தேர்வு செய்யப்படலாம்.
ஐ.பி.எல்., தொடர் முடிந்தவுடன் (வரும் மே 28), ஒரு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, இந்திய அணி வரும் ஜூன் 1ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. "டுவென்டி-20' போட்டி வரும் ஜூன் 4ல், போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது.
ஒருநாள் போட்டித் தொடர் வரும் ஜூன் 6, 8, 11, 13 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களை, ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவினர், இன்று சென்னையில் தேர்வுசெய்கின்றனர். இதில் கேப்டன் தோனி, புதிய பயிற்சியாளர் டங்கன் பிளட்சரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
சீனியர்கள் ஓய்வு?
தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதாலும், எதிர்வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடருக்கு சிறப்பாக தயாராகும் வகையிலும் சச்சின், ஜாகிர் கான், காயம் காரணமாக சேவக் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு தரப்படும் என்று தெரிகிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
காம்பிர் கேப்டன்:
கேப்டன் தோனிக்கு சில ஒருநாள் போட்டிகளில் ஓய்வு தரப்படலாம். இதனால் இந்திய அணியின் புதிய கேப்டனாக காம்பிர் நியமிக்கப்பட உள்ளார். இந்த ஐ.பி.எல்., தொடரில் 10 போட்டிகளில் 349 ரன்கள் குவித்துள்ள அம்பதி ராயுடு, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' அணியில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. இவருக்கு விக்கெட் கீப்பிங் திறமையும் இருப்பது கூடுதல் பலம்.
மீண்டும் பத்ரிநாத்:
கடந்த ரஞ்சிக் கோப்பை சீசனில் 922 ரன்கள் எடுத்து, தற்போதைய ஐ.பி.எல்., போட்டிகளில் இதுவரை 294 ரன்கள் குவித்து, சென்னை அணியின் பேட்டிங்கின் முதுகெலும்பாக இருக்கும் தமிழகத்தின் பத்ரிநாத்தும், இந்திய அணியில் மீண்டும் தேர்வு பெற அதிக வாய்ப்புள்ளது.
இவர்களுடன் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய பஞ்சாப்பின் வல்தாட்டி, "டுவென்டி-20' அணியில் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. தவிர, பெங்கால் ரஞ்சி அணி கேப்டன் மனோஜ் திவாரியும் இந்திய அணியில் சேர்க்கப்படலாம்.

பிரவீண் திரும்புகிறார்:
பவுலிங்கைப் பொறுத்தவரையில் நெஹ்ரா காயத்தால் அவதிப்படுவதால், பிரவீண் குமாருக்கு வாய்ப்பு தானாக செல்கிறது. இவருடன் இஷாந்த் சர்மா, முனாப் படேல் என, மூன்று பேர்கள் கூட்டணி தேர்வாகலாம். சுழலில் ஹர்பஜன் சிங்குடன், தமிழகத்தில் அஷ்வின் இணைகின்றார்.
அதேபோல உலக கோப்பை, ஐ.பி.எல்., தொடரில் ஏமாற்றிய பியுஸ் சாவ்லா, அணியில் இருந்து நீக்கப்படலாம். இவருக்குப் பதில் தற்போதைய "டுவென்டி-20' தொடரில் அசத்தும் பஞ்சாப் அணியின் ராகுலுக்கு சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஒருவேளை இடது கை சுழற்பந்து வீச்சாளருக்கு, தேர்வாளர்கள் முன்னுரிமை கொடுக்கும் பட்சத்தில், சரியாக செயல்படாத பிரக்யான் ஓஜாவை முந்தி, இக்பால் அப்துல்லா (கோல்கட்டா) தேர்வாகலாம். ஏனெனில் இவர் ரஞ்சிக் கோப்பை தொடரில், சிறந்த "ஆல் ரவுண்டராக' அசத்தியுள்ளார். தவிர, ஐ.பி.எல்., தொடரில் இதுவரை 13 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20 முதல் ஜூலை 10 வரை) பங்கேற்கும் அணி, பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment