Thursday 2 June 2011

வார்ன் மீது நடவடிக்கை - தீட்சித்

ஜெய்ப்பூர்: 
   ஆடுகளம் தொடர்பாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகியை திட்டிய ஷேன் வார்ன் மீது நடவடிக்கை எடுக்கும்படி பி.சி.சி.ஐ.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  
     நான்காவது ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணி, இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 5 வெற்றி உட்பட, மொத்தம் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில், ஒன்றில் தோற்றாலும் தொடரில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில், ஆடுகளம் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரச்னையில் சிக்கினார் ராஜஸ்தான் கேப்டன் வார்ன்.



     இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு, தங்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்க வேண்டும் என்று, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க (ஆர்.சி.ஏ.,) செயலர் சஞ்சய் தீட்சித்திடம், வார்ன் வற்புறுத்தியுள்ளார். ஆனால் இந்த போட்டியில் மீண்டும் தோற்க, வெறுப்பின் உச்சத்துக்கே சென்றார்.

 
ஷில்பா தலையீடு:

 
    பின் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது, அங்கிருந்த ஆர்.சி.ஏ., தலைவர் சஞ்சய் தீட்சித்தை, "தற்பெருமை கொண்டவர், பொய் சொல்லி ஏமாற்றுபவர்' என்று திட்டியுள்ளார். அப்போது தலையிட்ட ராஜஸ்தான் அணி உரிமையாளர் ஷில்பா ஷெட்டி, நடந்த செயலுக்கு, தீட்சித்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

 
இதுகுறித்து தீட்சித் கூறியது:     
     வார்னின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த தீட்சித், அவர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மற்றும் ஐ.பி.எல்., நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்போட்டி நடக்கும் ஆடுகளத்தை, இதற்கென அமைக்கப்பட்டுள்ள கமிட்டி மற்றும் அதன் பராமரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும் என, பி.சி.சி.ஐ., ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளது. இந்நிலையில் வார்னின் வற்புறுத்தலுக்கு, நான் எப்படி சம்மதிக்க முடியும். இவ்விஷயத்தில் அவரது செயல் முறையற்றது. தகாத முறையில் நடந்து கொண்ட, வார்ன் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment