Thursday, 2 June 2011

கங்குலிக்கு எதிரான போட்டியல்ல

கோல்கட்டா: 
     ""புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டி, கங்குலிக்கு எதிரானதல்ல,'' என, கோல்கட்டா அணி கேப்டன் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இருப்பினும் "டக்வொர்த்த-லீவிஸ்' முறைப்படி கோல்கட்டா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வரும் 19ம் தேதி மும்பையில் நடக்கவுள்ள லீக் போட்டியில் புனே வாரியர்ஸ்-கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

     இதுகுறித்து கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் கூறியதாவது: ஐ.பி.எல்., தொடரில், புனே அணிக்கு எதிரான போட்டி கங்குலிக்கு எதிரானதல்ல. கங்குலி, புனே அணியில் இடம் பெற்றுள்ளார் அவ்வளவுதான். இதனை கோல்கட்டா-புனே அணிகளுக்கு எதிரான போட்டியாகவே கருதுகிறேன்.

சென்னை அணிக்கு எதிராக கிடைத்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி மிகவும் முக்கியமான ஒன்று. அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, "டாப்-4' இடத்தை தக்கவைத்துக் கொள்வதே இலக்காக கொண்டுள்ளோம். இப்போட்டியின் வெற்றிக்கு பவுலர்களே முக்கிய காரணம். குறிப்பாக பிரட் லீ, இக்பால் அப்துல்லா இருவரும் மிகவும் அருமையாக பந்துவீசினர். பிரட் லீயிடம் இருந்து இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். சர்வதேச அனுபவம் வாய்ந்த இவர், ஒரு போட்டியில் சொதப்பினால் கூட அடுத்த போட்டியில் எழுச்சி பெற்றுவிடுவார். இது இவரது சிறப்பம்சம். 
     பிராட் ஹாடினுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர், சிறந்த பேட்ஸ்மேன். இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்.இவ்வாறு காம்பிர் கூறினார்.

பெங்களூரு அணி தொடர்ந்து 6வது வெற்றி!

ஜெய்ப்பூர்
   ஐ.பி.எல்., லீக் போட்டியில் அபாரமாக ஆடிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து 6வது வெற்றியை பெற்று சாதித்தது பெங்களூரு அணி.
      இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 55வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
இளம் கேப்டன்:
      வெட்டோரிக்கு(முழங்கால் காயம்) பதிலாக பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி(22 வயது) ஏற்றார். இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் மிக இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். "டாஸ்' வென்ற விராத் கோஹ்லி "பீல்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
  ராஜஸ்தான் அணிக்கு வாட்சன், டிராவிட் இணைந்து சூப்பர் துவக்கம் கொடுத்தனர். அரவிந்த் ஓவரில் வாட்சன் இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஜாகிர் ஓவரில் டிராவிட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து லாங்கிவெல்ட், அரவிந்த் பந்துகளை சிக்சருக்கு அனுப்பி அசத்தினார் வாட்சன்.
அரவிந்த் அபாரம்:
    இந்த நேரத்தில் போட்டியின் 10வது ஓவரை வீசிய அரவிந்த் திருப்புமுனை ஏற்படுத்தினார். 3வது பந்தில் வாட்சனை(34) வெளியேற்றினார். 5வது பந்தில் டிராவிட்(37) விக்கெட்டை கைப்பற்றி, இரட்டை "அடி' கொடுத்தார். இதற்கு பின் விராத் கோஹ்லி துல்லியமாக பந்துவீச, ராஜஸ்தான் அணியின் ரன் வேகம் அப்படியே குறைந்தது. ரகானே(17) வீணாக ரன் அவுட்டானார். அரவிந்த் வேகத்தில் போத்தாவும்(19) வீழ்ந்தார். ராஸ் டெய்லர்(13) மீண்டும் சொதப்பினார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்தது.
"சிக்சர்' கெய்ல்:
    சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், தில்ஷன் இணைந்து அருமையான அடித்தளம் அமைத்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சை ஒருகை பார்த்த இவர்கள் பவுண்டரி மழை பொழிந்தனர். முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், தில்ஷன்(38), வார்ன் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி ஒத்துழைக்க, மீண்டும் ஒரு முறை வாணவேடிக்கை காட்டினார் கெய்ல். 13 ரன்கள் எடுத்த நிலையில் வார்ன் கைநழுவியதால் கண்டம் தப்பிய இவர், போத்தா, ராஸ் டெய்லர், மனேரிய பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். பங்கஜ் சிங் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த கோஹ்லி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி 17 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. கெய்ல் 70(6 பவுண்டரி, 4 சிக்சர்), கோஹ்லி 39(3 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். லீக் சுற்றில் கோல்கட்டா, டில்லி, புனே, பஞ்சாப், கொச்சி, ராஜஸ்தான் அணிகளை வரிசையாக வீழ்த்திய பெங்களூரு அணி, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது.

வார்ன் மீது நடவடிக்கை - தீட்சித்

ஜெய்ப்பூர்: 
   ஆடுகளம் தொடர்பாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகியை திட்டிய ஷேன் வார்ன் மீது நடவடிக்கை எடுக்கும்படி பி.சி.சி.ஐ.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  
     நான்காவது ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணி, இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 5 வெற்றி உட்பட, மொத்தம் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில், ஒன்றில் தோற்றாலும் தொடரில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில், ஆடுகளம் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரச்னையில் சிக்கினார் ராஜஸ்தான் கேப்டன் வார்ன்.     இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு, தங்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்க வேண்டும் என்று, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க (ஆர்.சி.ஏ.,) செயலர் சஞ்சய் தீட்சித்திடம், வார்ன் வற்புறுத்தியுள்ளார். ஆனால் இந்த போட்டியில் மீண்டும் தோற்க, வெறுப்பின் உச்சத்துக்கே சென்றார்.

 
ஷில்பா தலையீடு:

 
    பின் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது, அங்கிருந்த ஆர்.சி.ஏ., தலைவர் சஞ்சய் தீட்சித்தை, "தற்பெருமை கொண்டவர், பொய் சொல்லி ஏமாற்றுபவர்' என்று திட்டியுள்ளார். அப்போது தலையிட்ட ராஜஸ்தான் அணி உரிமையாளர் ஷில்பா ஷெட்டி, நடந்த செயலுக்கு, தீட்சித்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

 
இதுகுறித்து தீட்சித் கூறியது:     
     வார்னின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த தீட்சித், அவர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மற்றும் ஐ.பி.எல்., நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்போட்டி நடக்கும் ஆடுகளத்தை, இதற்கென அமைக்கப்பட்டுள்ள கமிட்டி மற்றும் அதன் பராமரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும் என, பி.சி.சி.ஐ., ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளது. இந்நிலையில் வார்னின் வற்புறுத்தலுக்கு, நான் எப்படி சம்மதிக்க முடியும். இவ்விஷயத்தில் அவரது செயல் முறையற்றது. தகாத முறையில் நடந்து கொண்ட, வார்ன் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது

சென்னை: 
    
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில் சச்சின், சேவக், தோனி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டு, தமிழகத்தின் பத்ரிநாத், பிரவீண்குமார் தேர்வு செய்யப்படலாம்.

 
  ஐ.பி.எல்., தொடர் முடிந்தவுடன் (வரும் மே 28), ஒரு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, இந்திய அணி வரும் ஜூன் 1ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. "டுவென்டி-20' போட்டி வரும் ஜூன் 4ல், போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது.

 
   ஒருநாள் போட்டித் தொடர் வரும் ஜூன் 6, 8, 11, 13 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களை, ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவினர், இன்று சென்னையில் தேர்வுசெய்கின்றனர். இதில் கேப்டன் தோனி, புதிய பயிற்சியாளர் டங்கன் பிளட்சரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

 
சீனியர்கள் ஓய்வு?

 
  தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதாலும், எதிர்வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடருக்கு சிறப்பாக தயாராகும் வகையிலும் சச்சின், ஜாகிர் கான், காயம் காரணமாக சேவக் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு தரப்படும் என்று தெரிகிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

 
காம்பிர் கேப்டன்:

 
   கேப்டன் தோனிக்கு சில ஒருநாள் போட்டிகளில் ஓய்வு தரப்படலாம். இதனால் இந்திய அணியின் புதிய கேப்டனாக காம்பிர் நியமிக்கப்பட உள்ளார். இந்த ஐ.பி.எல்., தொடரில் 10 போட்டிகளில் 349 ரன்கள் குவித்துள்ள அம்பதி ராயுடு, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' அணியில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. இவருக்கு விக்கெட் கீப்பிங் திறமையும் இருப்பது கூடுதல் பலம்.

 
மீண்டும் பத்ரிநாத்:

 
    கடந்த ரஞ்சிக் கோப்பை சீசனில் 922 ரன்கள் எடுத்து, தற்போதைய ஐ.பி.எல்., போட்டிகளில் இதுவரை 294 ரன்கள் குவித்து, சென்னை அணியின் பேட்டிங்கின் முதுகெலும்பாக இருக்கும் தமிழகத்தின் பத்ரிநாத்தும், இந்திய அணியில் மீண்டும் தேர்வு பெற அதிக வாய்ப்புள்ளது.  இவர்களுடன் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய பஞ்சாப்பின் வல்தாட்டி, "டுவென்டி-20' அணியில் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. தவிர, பெங்கால் ரஞ்சி அணி கேப்டன் மனோஜ் திவாரியும் இந்திய அணியில் சேர்க்கப்படலாம்.

 
பிரவீண் திரும்புகிறார்:

 
    பவுலிங்கைப் பொறுத்தவரையில் நெஹ்ரா காயத்தால் அவதிப்படுவதால், பிரவீண் குமாருக்கு வாய்ப்பு தானாக செல்கிறது. இவருடன் இஷாந்த் சர்மா, முனாப் படேல் என, மூன்று பேர்கள் கூட்டணி தேர்வாகலாம். சுழலில் ஹர்பஜன் சிங்குடன், தமிழகத்தில் அஷ்வின் இணைகின்றார்.     அதேபோல உலக கோப்பை, ஐ.பி.எல்., தொடரில் ஏமாற்றிய பியுஸ் சாவ்லா, அணியில் இருந்து நீக்கப்படலாம். இவருக்குப் பதில் தற்போதைய "டுவென்டி-20' தொடரில் அசத்தும் பஞ்சாப் அணியின் ராகுலுக்கு சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஒருவேளை இடது கை சுழற்பந்து வீச்சாளருக்கு, தேர்வாளர்கள் முன்னுரிமை கொடுக்கும் பட்சத்தில், சரியாக செயல்படாத பிரக்யான் ஓஜாவை முந்தி, இக்பால் அப்துல்லா (கோல்கட்டா) தேர்வாகலாம். ஏனெனில் இவர் ரஞ்சிக் கோப்பை தொடரில், சிறந்த "ஆல் ரவுண்டராக' அசத்தியுள்ளார். தவிர, ஐ.பி.எல்., தொடரில் இதுவரை 13 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

 
   வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20 முதல் ஜூலை 10 வரை) பங்கேற்கும் அணி, பின்னர் அறிவிக்கப்படும்.

டி.ஆர்.எஸ்., முறை - பி.சி.சி.ஐ., எதிர்ப்பு

புதுடில்லி: 
     அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும், டி.ஆர்.எஸ்., முறையை அறிமுகம் செய்யும், ஐ.சி.சி.,யின் முடிவுக்கு, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 
         கடந்த 2009 முதல் டெஸ்ட் போட்டிகளில் அம்பயர் தீர்ப்பை மறு பரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) முறை, அந்தந்த நாடுகளின் விருப்பத்துக்கு ஏற்ப நடைமுறையில் உள்ளது. இதுவரை 31 போட்டிகளில் பயன் படுத்தப்பட்ட இதில், ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா 2 முறை, அப்பீல் செய்யலாம்.

 
        இதனிடையே, டி.ஆர்.எஸ்., முறையை, எதிர்வரும் காலங்களில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பயன்படுத்த, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) முடிவு செய்துள்ளது. தவிர, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளிலும், டி.ஆர்.எஸ்., முறையை, ஐ.சி.சி., அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால் இதில் தலா ஒரு முறை மட்டுமே அப்பீல் செய்யலாம்.

 
       ஐ.சி.சி.,யின் இம்முடிவுக்கு பி.சி.சி.ஐ., வழக்கம் போல எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" நாங்கள் எப்போதுமே டி.ஆர்.எஸ்., முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஐ.சி.சி.,யின் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் எங்கள் எதிர்ப்பை மீண்டும் தெரிவிப்போம்,'' என்றார்.

Tuesday, 17 May 2011

பா‌கி‌ஸ்தானை ‌வீ‌ழ்‌த்‌தியது மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு


     பி‌ன்ன‌‌ர் ‌விளையாடி பா‌கி‌‌ஸ்தா‌ன் 160 ர‌ன்னு‌க்கு சுரு‌ண்டது. இதனா‌ல் மே‌ற்‌‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி 66 ர‌ன்க‌‌ள் மு‌ன்‌னிலை பெ‌ற்றது.இதையடு‌த்து தனது 2வது இ‌ன்‌னி‌ங்சை தொட‌ங்‌கிய மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ண் அ‌ணி 152 ர‌ன்னு‌க்கு ‌ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தது.

     இதை‌த் தொட‌ர்‌ந்து பா‌கி‌ஸ்தா‌‌ன் அ‌ணி‌க்கு 219 ர‌ன் வெ‌ற்‌றி இல‌க்காக மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி ‌நி‌ர்ண‌யி‌த்தது.நே‌ற்று 2வது இ‌ன்‌னி‌ங்சை தொட‌ங்‌கிய பா‌கி‌ஸ்தா‌ன் 2 ர‌ன்னு‌க்கு 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை ப‌றிகொடு‌த்தது. பி‌ன்ன‌ர் ஷபீ‌க் - ‌‌மி‌ஸ்பா இணை ஓரளவு‌க்கு தா‌க்கு‌பிடி‌த்து ‌விளையாடியது. 42 ர‌ன் ஷ‌பீ‌க் எடு‌த்‌திரு‌ந்தபோது ரா‌ம்பா‌ல் ப‌ந்‌தி‌ல் ஆ‌ட்‌ட‌‌ம் இழ‌ந்தா‌ர்.

     இதை‌த் தொட‌ர்‌ந்து ‌மி‌ஸ்பாவுட‌ன் உம‌ர் அ‌க்ம‌ல் இணை சே‌ர்‌ந்து ‌விளையாடினா‌ர். அதை சத‌ம் கட‌ந்த ‌மி‌ஸ்பா ச‌‌மி ப‌ந்‌தி‌ல் ஆ‌ட்‌‌ட‌‌ம் இழ‌ந்து வெ‌ளியே‌றினா‌ர். ஒரு ப‌க்க‌ம் ‌வி‌க்கெ‌ட்டு‌க்கு மளமளவென ச‌ரி‌ந்தது. மறுப‌க்க‌ம் உம‌ர் அ‌க்ம‌ல் ‌அ‌ணியை வெ‌ற்‌றி‌ப் பாதை‌க்கு கொ‌ண்டு செ‌ல்வா‌‌ர் எ‌ன்பது எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் ச‌மி ப‌ந்‌தி‌ல் உம‌ர் அ‌க்ம‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். இவ‌ர் 47 ர‌ன் எடு‌த்தா‌ர்.

     பி‌ன்ன‌ர் வ‌ந்த ‌வீர‌‌ர்க‌ள் அனைவரு‌ம் சொ‌ற்ப ர‌ன்‌னி‌ல் வெ‌ளியே‌றின‌ர். 4வது நா‌ளிலேயே மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி பா‌கி‌ஸ்தா‌‌னை 178 ர‌ன்னு‌க்கு சுரு‌ட்டியது. இதனா‌ல் 40 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி வெ‌ற்‌றி பெ‌ற்றது.மே‌ற்‌கி‌ந்‌திய தர‌ப்‌பி‌ல் ச‌மி 5 ‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர். ரா‌ம்பா‌ல் 4 ‌வி‌க்கெ‌‌ட்டுகளையு‌ம், ரோ‌ச் ஒரு ‌வி‌க்கெ‌ட்டு‌ம் கை‌ப்ப‌ற்‌றின‌ர்.

     ஆ‌‌ட்ட நாயகனாக ச‌‌மி தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர். இரு ‌அ‌ணி‌களுக்கு‌ம் இடையேயான 2வது டெ‌‌ஸ்‌ட் போ‌ட்டி 20ஆ‌ம் தே‌தி நடைபெ‌று‌கிறது.

வார்ன் மீது விசாரணை

     ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க செயலரை திட்டிய, வார்ன் மீது இன்று விசாரணை நடக்கிறது.தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணி, 13 போட்டிகளில் 11 புள்ளிகள் மட்டும் பெற்று, தொடரில் இருந்து வெளியேறியது. இதனிடையே சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது.
 
  இதனால், தங்கள் அணிக்கு சாதகமாக ஆடுகளத்தை மாற்றாத, அம்மாநில கிரிக்கெட் சங்க (ஆர்.சி.ஏ.,) செயலர் சஞ்சய் தீட்சித்தை, வார்ன் திட்டினார்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மற்றும் ஐ.பி.எல்., நிர்வாகத்துக்கு தீட்சித் புகார் தெரிவித்தார். பின் நடந்த செயலுக்கு வார்ன், வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இருப்பினும் இதை தீட்சித் ஏற்கமறுத்தார்.
 
     இதனால், புகாரை விசாரிக்க ஐ.பி.எல்., தலைவர் சிராயு அமீன், முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி ஆகிய இருவர் அடங்கிய விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. இன்று இந்த கமிட்டியின் முன்பு ஆஜராகும் வார்ன், தீட்சித்திடம், புகார் குறித்து விசாரணை செய்யப்படுகிறது.