Thursday 2 June 2011

டி.ஆர்.எஸ்., முறை - பி.சி.சி.ஐ., எதிர்ப்பு

புதுடில்லி: 
     அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும், டி.ஆர்.எஸ்., முறையை அறிமுகம் செய்யும், ஐ.சி.சி.,யின் முடிவுக்கு, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 
         கடந்த 2009 முதல் டெஸ்ட் போட்டிகளில் அம்பயர் தீர்ப்பை மறு பரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) முறை, அந்தந்த நாடுகளின் விருப்பத்துக்கு ஏற்ப நடைமுறையில் உள்ளது. இதுவரை 31 போட்டிகளில் பயன் படுத்தப்பட்ட இதில், ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா 2 முறை, அப்பீல் செய்யலாம்.

 
        இதனிடையே, டி.ஆர்.எஸ்., முறையை, எதிர்வரும் காலங்களில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பயன்படுத்த, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) முடிவு செய்துள்ளது. தவிர, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளிலும், டி.ஆர்.எஸ்., முறையை, ஐ.சி.சி., அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால் இதில் தலா ஒரு முறை மட்டுமே அப்பீல் செய்யலாம்.

 
       ஐ.சி.சி.,யின் இம்முடிவுக்கு பி.சி.சி.ஐ., வழக்கம் போல எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" நாங்கள் எப்போதுமே டி.ஆர்.எஸ்., முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஐ.சி.சி.,யின் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் எங்கள் எதிர்ப்பை மீண்டும் தெரிவிப்போம்,'' என்றார்.

No comments:

Post a Comment