Thursday 2 June 2011

கங்குலிக்கு எதிரான போட்டியல்ல

கோல்கட்டா: 
     ""புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டி, கங்குலிக்கு எதிரானதல்ல,'' என, கோல்கட்டா அணி கேப்டன் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இருப்பினும் "டக்வொர்த்த-லீவிஸ்' முறைப்படி கோல்கட்டா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வரும் 19ம் தேதி மும்பையில் நடக்கவுள்ள லீக் போட்டியில் புனே வாரியர்ஸ்-கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

     இதுகுறித்து கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் கூறியதாவது: ஐ.பி.எல்., தொடரில், புனே அணிக்கு எதிரான போட்டி கங்குலிக்கு எதிரானதல்ல. கங்குலி, புனே அணியில் இடம் பெற்றுள்ளார் அவ்வளவுதான். இதனை கோல்கட்டா-புனே அணிகளுக்கு எதிரான போட்டியாகவே கருதுகிறேன்.

சென்னை அணிக்கு எதிராக கிடைத்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி மிகவும் முக்கியமான ஒன்று. அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, "டாப்-4' இடத்தை தக்கவைத்துக் கொள்வதே இலக்காக கொண்டுள்ளோம். இப்போட்டியின் வெற்றிக்கு பவுலர்களே முக்கிய காரணம். குறிப்பாக பிரட் லீ, இக்பால் அப்துல்லா இருவரும் மிகவும் அருமையாக பந்துவீசினர். பிரட் லீயிடம் இருந்து இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். சர்வதேச அனுபவம் வாய்ந்த இவர், ஒரு போட்டியில் சொதப்பினால் கூட அடுத்த போட்டியில் எழுச்சி பெற்றுவிடுவார். இது இவரது சிறப்பம்சம். 
     பிராட் ஹாடினுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர், சிறந்த பேட்ஸ்மேன். இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்.இவ்வாறு காம்பிர் கூறினார்.

பெங்களூரு அணி தொடர்ந்து 6வது வெற்றி!

ஜெய்ப்பூர்
   ஐ.பி.எல்., லீக் போட்டியில் அபாரமாக ஆடிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து 6வது வெற்றியை பெற்று சாதித்தது பெங்களூரு அணி.
      இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 55வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
இளம் கேப்டன்:
      வெட்டோரிக்கு(முழங்கால் காயம்) பதிலாக பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி(22 வயது) ஏற்றார். இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் மிக இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். "டாஸ்' வென்ற விராத் கோஹ்லி "பீல்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
  ராஜஸ்தான் அணிக்கு வாட்சன், டிராவிட் இணைந்து சூப்பர் துவக்கம் கொடுத்தனர். அரவிந்த் ஓவரில் வாட்சன் இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் ஜாகிர் ஓவரில் டிராவிட் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். தொடர்ந்து லாங்கிவெல்ட், அரவிந்த் பந்துகளை சிக்சருக்கு அனுப்பி அசத்தினார் வாட்சன்.
அரவிந்த் அபாரம்:
    இந்த நேரத்தில் போட்டியின் 10வது ஓவரை வீசிய அரவிந்த் திருப்புமுனை ஏற்படுத்தினார். 3வது பந்தில் வாட்சனை(34) வெளியேற்றினார். 5வது பந்தில் டிராவிட்(37) விக்கெட்டை கைப்பற்றி, இரட்டை "அடி' கொடுத்தார். இதற்கு பின் விராத் கோஹ்லி துல்லியமாக பந்துவீச, ராஜஸ்தான் அணியின் ரன் வேகம் அப்படியே குறைந்தது. ரகானே(17) வீணாக ரன் அவுட்டானார். அரவிந்த் வேகத்தில் போத்தாவும்(19) வீழ்ந்தார். ராஸ் டெய்லர்(13) மீண்டும் சொதப்பினார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்தது.
"சிக்சர்' கெய்ல்:
    சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், தில்ஷன் இணைந்து அருமையான அடித்தளம் அமைத்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சை ஒருகை பார்த்த இவர்கள் பவுண்டரி மழை பொழிந்தனர். முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், தில்ஷன்(38), வார்ன் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி ஒத்துழைக்க, மீண்டும் ஒரு முறை வாணவேடிக்கை காட்டினார் கெய்ல். 13 ரன்கள் எடுத்த நிலையில் வார்ன் கைநழுவியதால் கண்டம் தப்பிய இவர், போத்தா, ராஸ் டெய்லர், மனேரிய பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். பங்கஜ் சிங் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த கோஹ்லி, அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். பெங்களூரு அணி 17 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. கெய்ல் 70(6 பவுண்டரி, 4 சிக்சர்), கோஹ்லி 39(3 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். லீக் சுற்றில் கோல்கட்டா, டில்லி, புனே, பஞ்சாப், கொச்சி, ராஜஸ்தான் அணிகளை வரிசையாக வீழ்த்திய பெங்களூரு அணி, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது.

வார்ன் மீது நடவடிக்கை - தீட்சித்

ஜெய்ப்பூர்: 
   ஆடுகளம் தொடர்பாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகியை திட்டிய ஷேன் வார்ன் மீது நடவடிக்கை எடுக்கும்படி பி.சி.சி.ஐ.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  
     நான்காவது ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணி, இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 5 வெற்றி உட்பட, மொத்தம் 11 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில், ஒன்றில் தோற்றாலும் தொடரில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில், ஆடுகளம் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரச்னையில் சிக்கினார் ராஜஸ்தான் கேப்டன் வார்ன்.



     இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு, தங்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்க வேண்டும் என்று, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க (ஆர்.சி.ஏ.,) செயலர் சஞ்சய் தீட்சித்திடம், வார்ன் வற்புறுத்தியுள்ளார். ஆனால் இந்த போட்டியில் மீண்டும் தோற்க, வெறுப்பின் உச்சத்துக்கே சென்றார்.

 
ஷில்பா தலையீடு:

 
    பின் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது, அங்கிருந்த ஆர்.சி.ஏ., தலைவர் சஞ்சய் தீட்சித்தை, "தற்பெருமை கொண்டவர், பொய் சொல்லி ஏமாற்றுபவர்' என்று திட்டியுள்ளார். அப்போது தலையிட்ட ராஜஸ்தான் அணி உரிமையாளர் ஷில்பா ஷெட்டி, நடந்த செயலுக்கு, தீட்சித்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

 
இதுகுறித்து தீட்சித் கூறியது:     
     வார்னின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த தீட்சித், அவர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மற்றும் ஐ.பி.எல்., நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்போட்டி நடக்கும் ஆடுகளத்தை, இதற்கென அமைக்கப்பட்டுள்ள கமிட்டி மற்றும் அதன் பராமரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும் என, பி.சி.சி.ஐ., ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளது. இந்நிலையில் வார்னின் வற்புறுத்தலுக்கு, நான் எப்படி சம்மதிக்க முடியும். இவ்விஷயத்தில் அவரது செயல் முறையற்றது. தகாத முறையில் நடந்து கொண்ட, வார்ன் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது

சென்னை: 
    
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில் சச்சின், சேவக், தோனி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டு, தமிழகத்தின் பத்ரிநாத், பிரவீண்குமார் தேர்வு செய்யப்படலாம்.

 
  ஐ.பி.எல்., தொடர் முடிந்தவுடன் (வரும் மே 28), ஒரு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, இந்திய அணி வரும் ஜூன் 1ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. "டுவென்டி-20' போட்டி வரும் ஜூன் 4ல், போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது.

 
   ஒருநாள் போட்டித் தொடர் வரும் ஜூன் 6, 8, 11, 13 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களை, ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவினர், இன்று சென்னையில் தேர்வுசெய்கின்றனர். இதில் கேப்டன் தோனி, புதிய பயிற்சியாளர் டங்கன் பிளட்சரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

 
சீனியர்கள் ஓய்வு?

 
  தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதாலும், எதிர்வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடருக்கு சிறப்பாக தயாராகும் வகையிலும் சச்சின், ஜாகிர் கான், காயம் காரணமாக சேவக் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு தரப்படும் என்று தெரிகிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

 
காம்பிர் கேப்டன்:

 
   கேப்டன் தோனிக்கு சில ஒருநாள் போட்டிகளில் ஓய்வு தரப்படலாம். இதனால் இந்திய அணியின் புதிய கேப்டனாக காம்பிர் நியமிக்கப்பட உள்ளார். இந்த ஐ.பி.எல்., தொடரில் 10 போட்டிகளில் 349 ரன்கள் குவித்துள்ள அம்பதி ராயுடு, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' அணியில் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. இவருக்கு விக்கெட் கீப்பிங் திறமையும் இருப்பது கூடுதல் பலம்.

 
மீண்டும் பத்ரிநாத்:

 
    கடந்த ரஞ்சிக் கோப்பை சீசனில் 922 ரன்கள் எடுத்து, தற்போதைய ஐ.பி.எல்., போட்டிகளில் இதுவரை 294 ரன்கள் குவித்து, சென்னை அணியின் பேட்டிங்கின் முதுகெலும்பாக இருக்கும் தமிழகத்தின் பத்ரிநாத்தும், இந்திய அணியில் மீண்டும் தேர்வு பெற அதிக வாய்ப்புள்ளது.



  இவர்களுடன் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய பஞ்சாப்பின் வல்தாட்டி, "டுவென்டி-20' அணியில் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. தவிர, பெங்கால் ரஞ்சி அணி கேப்டன் மனோஜ் திவாரியும் இந்திய அணியில் சேர்க்கப்படலாம்.

 
பிரவீண் திரும்புகிறார்:

 
    பவுலிங்கைப் பொறுத்தவரையில் நெஹ்ரா காயத்தால் அவதிப்படுவதால், பிரவீண் குமாருக்கு வாய்ப்பு தானாக செல்கிறது. இவருடன் இஷாந்த் சர்மா, முனாப் படேல் என, மூன்று பேர்கள் கூட்டணி தேர்வாகலாம். சுழலில் ஹர்பஜன் சிங்குடன், தமிழகத்தில் அஷ்வின் இணைகின்றார்.



     அதேபோல உலக கோப்பை, ஐ.பி.எல்., தொடரில் ஏமாற்றிய பியுஸ் சாவ்லா, அணியில் இருந்து நீக்கப்படலாம். இவருக்குப் பதில் தற்போதைய "டுவென்டி-20' தொடரில் அசத்தும் பஞ்சாப் அணியின் ராகுலுக்கு சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஒருவேளை இடது கை சுழற்பந்து வீச்சாளருக்கு, தேர்வாளர்கள் முன்னுரிமை கொடுக்கும் பட்சத்தில், சரியாக செயல்படாத பிரக்யான் ஓஜாவை முந்தி, இக்பால் அப்துல்லா (கோல்கட்டா) தேர்வாகலாம். ஏனெனில் இவர் ரஞ்சிக் கோப்பை தொடரில், சிறந்த "ஆல் ரவுண்டராக' அசத்தியுள்ளார். தவிர, ஐ.பி.எல்., தொடரில் இதுவரை 13 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

 
   வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20 முதல் ஜூலை 10 வரை) பங்கேற்கும் அணி, பின்னர் அறிவிக்கப்படும்.

டி.ஆர்.எஸ்., முறை - பி.சி.சி.ஐ., எதிர்ப்பு

புதுடில்லி: 
     அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும், டி.ஆர்.எஸ்., முறையை அறிமுகம் செய்யும், ஐ.சி.சி.,யின் முடிவுக்கு, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 
         கடந்த 2009 முதல் டெஸ்ட் போட்டிகளில் அம்பயர் தீர்ப்பை மறு பரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) முறை, அந்தந்த நாடுகளின் விருப்பத்துக்கு ஏற்ப நடைமுறையில் உள்ளது. இதுவரை 31 போட்டிகளில் பயன் படுத்தப்பட்ட இதில், ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா 2 முறை, அப்பீல் செய்யலாம்.

 
        இதனிடையே, டி.ஆர்.எஸ்., முறையை, எதிர்வரும் காலங்களில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பயன்படுத்த, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) முடிவு செய்துள்ளது. தவிர, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளிலும், டி.ஆர்.எஸ்., முறையை, ஐ.சி.சி., அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால் இதில் தலா ஒரு முறை மட்டுமே அப்பீல் செய்யலாம்.

 
       ஐ.சி.சி.,யின் இம்முடிவுக்கு பி.சி.சி.ஐ., வழக்கம் போல எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" நாங்கள் எப்போதுமே டி.ஆர்.எஸ்., முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஐ.சி.சி.,யின் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் எங்கள் எதிர்ப்பை மீண்டும் தெரிவிப்போம்,'' என்றார்.

Tuesday 17 May 2011

பா‌கி‌ஸ்தானை ‌வீ‌ழ்‌த்‌தியது மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு


     பி‌ன்ன‌‌ர் ‌விளையாடி பா‌கி‌‌ஸ்தா‌ன் 160 ர‌ன்னு‌க்கு சுரு‌ண்டது. இதனா‌ல் மே‌ற்‌‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி 66 ர‌ன்க‌‌ள் மு‌ன்‌னிலை பெ‌ற்றது.இதையடு‌த்து தனது 2வது இ‌ன்‌னி‌ங்சை தொட‌ங்‌கிய மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ண் அ‌ணி 152 ர‌ன்னு‌க்கு ‌ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தது.

     இதை‌த் தொட‌ர்‌ந்து பா‌கி‌ஸ்தா‌‌ன் அ‌ணி‌க்கு 219 ர‌ன் வெ‌ற்‌றி இல‌க்காக மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி ‌நி‌ர்ண‌யி‌த்தது.நே‌ற்று 2வது இ‌ன்‌னி‌ங்சை தொட‌ங்‌கிய பா‌கி‌ஸ்தா‌ன் 2 ர‌ன்னு‌க்கு 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை ப‌றிகொடு‌த்தது. பி‌ன்ன‌ர் ஷபீ‌க் - ‌‌மி‌ஸ்பா இணை ஓரளவு‌க்கு தா‌க்கு‌பிடி‌த்து ‌விளையாடியது. 42 ர‌ன் ஷ‌பீ‌க் எடு‌த்‌திரு‌ந்தபோது ரா‌ம்பா‌ல் ப‌ந்‌தி‌ல் ஆ‌ட்‌ட‌‌ம் இழ‌ந்தா‌ர்.

     இதை‌த் தொட‌ர்‌ந்து ‌மி‌ஸ்பாவுட‌ன் உம‌ர் அ‌க்ம‌ல் இணை சே‌ர்‌ந்து ‌விளையாடினா‌ர். அதை சத‌ம் கட‌ந்த ‌மி‌ஸ்பா ச‌‌மி ப‌ந்‌தி‌ல் ஆ‌ட்‌‌ட‌‌ம் இழ‌ந்து வெ‌ளியே‌றினா‌ர். ஒரு ப‌க்க‌ம் ‌வி‌க்கெ‌ட்டு‌க்கு மளமளவென ச‌ரி‌ந்தது. மறுப‌க்க‌ம் உம‌ர் அ‌க்ம‌ல் ‌அ‌ணியை வெ‌ற்‌றி‌ப் பாதை‌க்கு கொ‌ண்டு செ‌ல்வா‌‌ர் எ‌ன்பது எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் ச‌மி ப‌ந்‌தி‌ல் உம‌ர் அ‌க்ம‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். இவ‌ர் 47 ர‌ன் எடு‌த்தா‌ர்.

     பி‌ன்ன‌ர் வ‌ந்த ‌வீர‌‌ர்க‌ள் அனைவரு‌ம் சொ‌ற்ப ர‌ன்‌னி‌ல் வெ‌ளியே‌றின‌ர். 4வது நா‌ளிலேயே மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி பா‌கி‌ஸ்தா‌‌னை 178 ர‌ன்னு‌க்கு சுரு‌ட்டியது. இதனா‌ல் 40 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி வெ‌ற்‌றி பெ‌ற்றது.மே‌ற்‌கி‌ந்‌திய தர‌ப்‌பி‌ல் ச‌மி 5 ‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர். ரா‌ம்பா‌ல் 4 ‌வி‌க்கெ‌‌ட்டுகளையு‌ம், ரோ‌ச் ஒரு ‌வி‌க்கெ‌ட்டு‌ம் கை‌ப்ப‌ற்‌றின‌ர்.

     ஆ‌‌ட்ட நாயகனாக ச‌‌மி தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர். இரு ‌அ‌ணி‌களுக்கு‌ம் இடையேயான 2வது டெ‌‌ஸ்‌ட் போ‌ட்டி 20ஆ‌ம் தே‌தி நடைபெ‌று‌கிறது.

வார்ன் மீது விசாரணை

     ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க செயலரை திட்டிய, வார்ன் மீது இன்று விசாரணை நடக்கிறது.தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணி, 13 போட்டிகளில் 11 புள்ளிகள் மட்டும் பெற்று, தொடரில் இருந்து வெளியேறியது. இதனிடையே சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது.
 
  இதனால், தங்கள் அணிக்கு சாதகமாக ஆடுகளத்தை மாற்றாத, அம்மாநில கிரிக்கெட் சங்க (ஆர்.சி.ஏ.,) செயலர் சஞ்சய் தீட்சித்தை, வார்ன் திட்டினார்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மற்றும் ஐ.பி.எல்., நிர்வாகத்துக்கு தீட்சித் புகார் தெரிவித்தார். பின் நடந்த செயலுக்கு வார்ன், வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இருப்பினும் இதை தீட்சித் ஏற்கமறுத்தார்.
 
     இதனால், புகாரை விசாரிக்க ஐ.பி.எல்., தலைவர் சிராயு அமீன், முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி ஆகிய இருவர் அடங்கிய விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. இன்று இந்த கமிட்டியின் முன்பு ஆஜராகும் வார்ன், தீட்சித்திடம், புகார் குறித்து விசாரணை செய்யப்படுகிறது.

மிஸ்ரா ஜாலம் - டெக்கான் கலக்கல் வெற்றி

ஐ.பி.எல்., லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த 62வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டெக்கான் கேப்டன் சங்ககரா "பீல்டிங்' தேர்வு செய்தார்.
 
விக்கெட் சரிவு:
 
     புனே அணிக்கு ஜெசி ரைடர், மனிஷ் பாண்டே இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். டுமினி வீசிய முதல் ஓவரில் பாண்டே ஒரு பவுண்டரி, ரைடர் ஒரு இமாலய சிக்சர் அடித்தனர். ஸ்டைன் வேகத்தில் ரைடர்(18) வெளியேறினார். இதற்கு பின் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. ஓஜா சுழலில் கங்குலி "டக்' அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய ஓஜா பந்தில் பாண்டேவும்(23) வீழ்ந்தார்.
 
     போட்டியின் 8வது ஓவரை வீசிய அமித் மிஸ்ரா இரட்டை "அடி' கொடுத்தார். 4வது பந்தில் உத்தப்பாவை(4) வெளியேற்றினார். 5வது பந்தில் மன்ஹாஸ்(0) போல்டானார். அடுத்து வந்த பெர்குசன் தடுத்து ஆட மிஸ்ராவின் "ஹாட்ரிக்' வாய்ப்பு தகர்ந்தது. அப்போது புனே அணி 5 விக்கெட்டுக்கு 45 ரன்கள் மட்டும் எடுத்து தத்தளித்தது.
 
     பின் பெர்குசன், கேப்டன் யுவராஜ் இணைந்து போராடினர். ஓஜா சுழலில் யுவராஜ் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அசத்தினார். டுமினி வலையில் பெர்குசன்(11) சிக்கினார். கிறிஸ்டியன் பந்தில் யுவராஜ்(23) அவுட்டாக, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது.கடைசி கட்டத்தில் மிட்சல் மார்ஷ் கைகொடுத்தார். அமித் மிஸ்ரா, ஓஜா பந்துகளில் சிக்சர்களை பறக்க விட்ட இவர் 37 ரன்கள் எடுத்தார். பார்னல்(16) ரன் அவுட்டானார். புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டும் எடுத்தது.
 
அசத்தல் ஆட்டம்:
 
     சுலப இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு ஷிகர் தவான், சன்னி சோகல் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். மிட்சல் மார்ஷ் ஓவரில் சோகல் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில், யுவராஜ் பந்தில் தவான்(28) அவுட்டானார். ராகுல் சர்மா சுழலில் சோகல்(34) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய சங்ககரா(25), ராகுல் சர்மா பந்தில், விக்கெட் கீப்பர் உத்தப்பாவிடம் "கேட்ச்' கொடுத்தார். "அவுட்' என தெரிந்ததும், அம்பயரின் தீர்ப்புக்காக காத்திருக்காமல் தானாகவே வெளியேறி "ஜென்டில்மேனாக' நடந்து கொண்டார் சங்ககரா.
 
     பின் கிறிஸ்டியன், டுமினி இணைந்து நம்பிக்கை தந்தனர். யுவராஜ் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த டுமினி 23 ரன்கள் எடுத்தார். பார்னல் பந்தில் சிப்லி ஒரு அசத்தல் பவுண்டரி அடிக்க, டெக்கான் அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. இத்தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை புனே அணி இழந்தது.ஆட்ட நாயகன் விருதை அமித் மிஸ்ரா வென்றார்.

எஸ்.எல்.பி.எல்., டுவென்டி-20

     இலங்கை பிரிமியர் லீக் சார்பில் (எஸ்.எல்.பி.எல்.,) நடத்தப்படும், "டுவென்டி-20' போட்டித் தொடரில் முனாப் படேல், அஷ்வின் உள்ளிட்ட 12 இந்திய வீரர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.ஐ.பி.எல்., தொடரைப் போல, எஸ்.எல்.பி.எல்., "டுவென்டி-20' தொடர், வரும் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 4 ம் தேதி வரை, இலங்கையில் நடக்கிறது. இதில் மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்கின்றன. 18 நாட்கள் நடக்கும் இத்தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், போலார்டு, பாகிஸ்தானின் அப்ரிதி, அக்தர், தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.தற்போது இந்திய வீரர்களும் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதுகுறித்து வெளியான செய்தி:
 
     இலங்கை "டுவென்டி-20' தொடரில் வார்னர், காயத்தில் இருந்து மீண்ட பின் வெட்டோரி ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், மனிஷ் பாண்டே, மனோஜ் திவாரி, வல்தாட்டி, ரவிந்திர ஜடேஜா, சவுரப் திவாரி, உமேஷ் யாதவ், வினய் குமார் உள்ளிட்ட இந்திய வீரர்களும் பங்கேற்கலாம். முனாப் படேல், அஷ்வின், பிரவீண் குமாரும் இத்தொடரில் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தரமான பவுலர் சாவ்லா

     "டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சுழற்பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு, ஆட்ட நாயகன் விருதினை பெற்ற பியுஸ் சாவ்லா முதல் தரமான பவுலர்,'' என, பஞ்சாப் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் பாராட்டியுள்ளார்.ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று முன்னோக்கி செல்கிறது. 

இது குறித்து அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் கூறியது:
 
     பஞ்சாப் அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பியுஸ் சாவ்லா, வெற்றிக்கு பெரிதும் உதவி வருகிறார். டில்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். சர்வதேச தர வாய்ந்த பவுலரான இவர், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளது சிறப்பம்சம். ஷேன் மார்ஷ், வல்தாட்டி மீண்டும் எழுச்சி பெற்றுள்ளனர். கடந்த போட்டியில் டில்லி வீரர்கள், பீல்டிங்கில் சொதப்பியது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்த வெற்றி அதிக தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வரும் போட்டிகளிலும் பஞ்சாப் அணியின் வெற்றி தொடரும்
இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.

Sunday 15 May 2011

பாகிஸ்தான் சுருண்டது

     மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌தீவுக‌ள் அ‌ணி‌க்கு எதிரான முதல் டெஸ்ட் போ‌ட்டி‌யி‌ல் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 160 ரன்களுக்குள் சுருண்டது.இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கயனாவில் 12ஆ‌‌ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி 226 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 160 ரன்களுக்குள் சுருண்டது.

     அதிகபட்சமாக அப்துல் ரகுமான் 40 ரன்கள் எடுத்து அவுட்டாகவில்லை. அசார் அலி 34 ரன்களும், உமர் அக்மல் 33 ரன்களும் எடுத்தனர்.பந்து வீச்சில் பிஷு 4 விக்கெட்களும், ராம்பால் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். பின்னர் 66 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடிய மே‌‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணி நேற்று 2வது நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. சிம்மோன்ஸ் 18 ரன்களுடனும், ரோ‌ச்சா 4 ர‌ன்‌னிலு‌ம் கள‌த்த‌ி‌ல் உ‌ள்ளன‌ர்.

சச்சினுக்கு விருது

     இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், "பாலி உம்ரிகர்' விருது வழங்கப்பட உள்ளது. பி.சி.சி.ஐ., சார்பில் வரும் மே 31ம் தேதி மும்பையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட்டில் சாதித்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. தவிர, 28 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி, உலக கோப்பை வென்றதையும் கொண்டாட உள்ளது.
 
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறியது:
 
     கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் சாதித்து வருபவர் இந்திய அணியின் சச்சின் (38). இவர் கடந்த பத்தாவது உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தார். தவிர, கடந்த ஆண்டில் பங்கேற்ற 10 டெஸ்ட் போட்டிகளில், ஒரு இரட்டை சதம், ஐந்து சதம் உட்பட மொத்தம் 1064 ரன்கள் எடுத்துள்ளார். 12 நாள் போட்டிகளில் ஒரு இரட்டைசதம் உட்பட 695 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு 2009-2010 ஆண்டில் சிறந்து விளங்கியதற்காக "பாலி உம்ரிகர்' விருது வழங்கப்படுகிறது. இதற்கான கோப்பையுடன், சச்சினுக்கு ஐந்து லட்ச ரூபாயும் தரப்பட உள்ளது.
 
   இத்துடன் ஜி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வரும் மே 27ல் வெளியாகும். இந்த விருது பெறுபவர்களுக்கு கோப்பையுடன், ரூ. 15 லட்சம் கிடைக்கும். இத்துடன் மனிஷ் பாண்டே, அபிமன்யு மிதுன் போன்ற பல வீரர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.

டெக்கான் அபாரம்

     ஐ.பி.எல்., லீக் போட்டியில், பேட்டிங்கில் சொதப்பிய மும்பை அணி, 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பவுலிங்கில் எழுச்சி கண்ட டெக்கான் அணி, இத்தொடரின் நான்காவது வெற்றியை பதிவு செய்தது.நான்காவது ஐ.பி.எல்., தொடரின் 59வது லீக் போட்டி, மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
 
     டெக்கான் அணி ரன் கணக்கை துவக்கும் முன், லம்ப் போல்டாகி அதிர்ச்சி தந்தார். சற்றுத் தாக்குப்பிடித்த, மற்றொரு துவக்க வீரர் சன்னி சோகல் 20 ரன்கள் எடுத்தார். கேப்டன் சங்ககராவும் (27) நிலைக்கவில்லை. "மிடில் ஆர்டரில்' டுமினி (8) ஏமாற்றினார். சிப்லி (10), கிறிஸ்டியனை (18) குல்கர்னி கவனித்துக் கொண்டார். முனாப் படேல் வீசிய கடைசி ஓவரில் அமித் மிஸ்ரா, தொடர்ச்சியாக நான்கு பவுண்டரி விளாசி அசத்தினார். டெக்கான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. சிகர் தவான் (27), அமித் மிஸ்ரா (18) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் குல்கர்னி 3 விக்கெட் வீழ்த்தினார்.
 
சச்சின் ஆறுதல்:
 
     எளிதான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு, துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டுமினியின் சுழலில் பிலிஜார்டு (1) சிக்கினார். அம்பதி ராயுடு (2), ரோகித் சர்மா (4) ஆகியோரும் அணியை கைவிட, மும்பை அணி 25 ரன்னுக்கு, 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
 
     நீண்ட நேரம் தடுமாறிய சைமண்ட்ஸ், 19 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்டானார். இரண்டு சிக்சர் அடித்த சுமன் (14), ஆனந்த் ராஜன் வேகத்தில் வீழ்ந்தார். இதே ஓவரின் கடைசி பந்தில், பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சினும் (37), அவுட்டாக, மும்பை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.
 
மும்பை தோல்வி:
 
     கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு, 26 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் போலார்டு, "சூப்பர்' சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் "வைடு' உட்பட 3 ரன்கள் எடுக்கப்பட்டது. 3வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்த போலார்டு (24), அடுத்த பந்தில் வீழ்ந்தார். கடைசி 2 பந்தில் 13 ரன் தேவை என்ற நிலையில், மலிங்கா "டக்' அவுட்டாக, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 125 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஹர்பஜன் (17), குல்கர்னி (0) அவுட்டாகாமல் இருந்தனர். டெக்கான் அணியின் ஆனந்த் ராஜன், 3 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக அமித் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார்.

முனாப்-மிஸ்ரா 
     
     நேற்று முனாப் படேல் (மும்பை) வீசிய, 20வது ஓவரின் முதல் பந்தில், சிகர் தவான் சிக்சர் அடித்தார். "ஷார்ட் பிட்ச்சாக' வந்த 3வது பந்தை அமித் மிஸ்ரா பவுண்டரிக்கு அனுப்பினார். இதனால் அமித் மிஸ்ரா, சிகர் தவானுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் முனாப் படேல். பின் 5 வது பந்தை மீண்டும் பவுண்டரிக்கு அனுப்பி, ரன் எடுக்க முயன்ற போது முனாப் படேல்-அமித் மிஸ்ரா இருவரும் மோதிக் கொண்டு, மறுபடியும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

கெய்ல் "மழை" - பெங்களூரு வெற்றி

     ஐ.பி.எல்., லீக் போட்டியில் கிறிஸ் கெய்லின் அதிரடி கைகொடுக்க, பெங்களூரு அணி "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஐ.பி.எல்., தொடரில், தொடர்ந்து ஏழாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது பெங்களூரு அணி.
நான்காவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடக்கிறது. இதில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த போட்டியில் விராத் கோஹ்லியின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, காம்பிரின் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.பெங்களூரு அணியின் தில்ஷன் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க சென்று விட்டதால், பாமர்ஸ்பச் வாய்ப்பு பெற்றார்.

     பெங்களூரு அணிக்கு வழக்கம் போல காலிஸ், மார்கன் இணைந்து துவக்கம் தந்தனர். ஜாகிர் கானின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசிய அதிரடியாக துவக்கினார் காலிஸ். ஆனால் மார்கன் (2) சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. காலிஸ் தன்பங்குக்கு 17 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
நம்பிக்கை தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் காம்பிரும் (7) கைவிட, கோல்கட்டா அணி 30 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ரன்வேகம் குறைந்தது.
 
மழை குறுக்கீடு:
 
     இதன் பின் இணைந்த யூசுப் பதான், மனோஜ் திவாரி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. மிதுன், கெய்ல் பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார் யூசுப் பதான். 11 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது.
மீண்டும் போட்டி துவங்கிய போது 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. யூசுப் பதான் 36 ரன்கள் எடுத்து திரும்பினார். 13 ஓவரின் முடிவில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, 4 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி (19), பவுச்சர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
 
கெய்ல் "மழை":
 
     "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 13 ஓவரில் 102 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற, மாற்றப்பட்ட இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு, கெய்ல் பவுண்டரி மழை பொழிந்தார். பிரட் லீ வீசிய முதல் ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்து அசத்தினார். உனத்கட்டின் அடுத்த ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்கள் விளாசி மிரட்டினார். 12 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 38 ரன்கள் எடுத்தபோது, பிரட் லீ வேகத்தில் காலிசிடம் பிடிகொடுத்து திரும்பினார்.

     பாமர்ஸ்பச் 16 ரன்கள் எடுத்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராத் கோஹ்லி (15) நிலைக்கவில்லை. முகமது கைப்பும் (15), அருண் கார்த்திக் (1) விரைவில் அவுட்டாகினர். சவுரப் திவாரி (1) ரன் அவுட்டானார். கடைசியில் டிவிலியர்ஸ், "சூப்பர்" பவுண்டரி அடிக்க, பெங்களூரு அணி 12.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்து, "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Saturday 14 May 2011

இந்திய அணி அறிவிக்கப்பட்டது - கம்பீர் கேப்டன்

     மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.சுரேஷ் ரெய்னா துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் சச்சின், ஜாகீர் கான், சேவாக், தோனி ஆகியோர் இடம்பெறவில்லை.

     அதே போல் ஸ்ரீசாந்த், சாவ்லாவுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. அணியில் மீண்டும் இஷாந்த், அமித் மிஷ்ரா, பிரவீண் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.விக்கெட் கீப்பராக பார்த்தீவ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக வீரர் பத்ரினாத் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணி விவரம் வருமாறு: 

     கம்பீர், ரெய்னா, பார்த்தீவ் படேல், விராட் கோலி, யுவ்ராஜ் சிங், எஸ்.பத்ரிநாத், ரோஹித் ஷர்மா, ஹர்பஜன் சிங், ஆர்.அஷ்வின், பிரவீண் குமார், இஷாந்த் ஷர்மா, முனாஃப் படேல், வினய் குமார், யூசுப் பத்தான், அமித் மிஷ்ரா, விருத்திமான் சஹா.

கார்த்திக் அதிரடி - பஞ்சாப் வெற்றி

இந்தூர்: 

     ஐ.பி.எல்., லீக் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. பவுலிங்கில் சொதப்பிய கொச்சி அணி, இத்தொடரின் ஏழாவது தோல்வியை பதிவு செய்தது.நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று இந்தூரில் நடந்த லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் கில்கிறிஸ்ட், பீல்டிங் தேர்வு செய்தார்.
 
சூப்பர் துவக்கம்:
 
     கொச்சி அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா, மெக்கலம் ஜோடி இணைந்து சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஹாரிசின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பவுண்டரியுடன் அதிரடியை துவக்கினார் ஜெயவர்தனா. இவரது ஓவரில் தன் பங்கிற்கு 2 சிக்சர் அடித்து மிரட்டினார் மெக்கலம். முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில், மெக்கலம் (32) அவுட்டானார்.பின் வந்த ஜடேஜா (17), ஹாட்ஜ் (4) நிலைக்கவில்லை. ஓவைஷா (23), ரன் அவுட்டானார். பார்த்திவ் படேல் "டக்' அவுட்டாக, கோமெஜ் 2 ரன் மட்டும் எடுத்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்த போதும், அதிரடியில் அசத்திய ஜெயவர்தனா, (76 ரன்கள், 52 பந்து) கடைசியில் ரன் அவுட்டானார். கொச்சி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு, 178 ரன்கள் எடுத்தது.
 
பெரிய இலக்கு:
 
     கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு வல்தாட்டி (17) மீண்டும் ஏமாற்றம் தந்தார். கில்கிறிஸ்ட் (9) சொதப்பினார். இதன் பின் இணைந்த மார்ஷ், தினேஷ் கார்த்திக் ஜோடி, மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதில் தினேஷ் கார்த்திக், சிக்சர் மழை பொழிந்தார். வினய் குமார், கோமெஜ் மற்றும் பரமேஷ்வரன் என யாரையும் இவர் விட்டுவைக்கவில்லை. ஹாட்ஜ், ஜடேஜா ஓவர்களில் தலா 2 சிக்சர்கள் விளாசிய இவர், 3வது ஐ.பி.எல்., அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த நிலையில், தினேஷ் கார்த்திக் 69 ரன்னில் (7 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்டானார். இதேஓவரின் கடைசி பந்தில் மார்ஷ் (42) வீழ்ந்தார்.பின் வந்த ஹசி (21), மந்தீப் சிங் (15) இணைந்து, ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகாரப்போக்கு எடுபடாது - பிளெட்சர்


     இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலாம் அணியாகவும், ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாம்பியனாகவும் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்த கேரி கர்ஸ்டனின் நிர்வாகத்திறமை மீது இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை அதிக மதிப்பு வைத்திருந்தது.இந்த நிலையில் அவர் திடீரென விலக, டன்கன் பிளெட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்து அணியை 2005ஆம் ஆண்டின் புகழ் பெற்ற ஆஷஸ் வெற்றிக்கு இட்டு சென்றார்.

     இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது பற்றி அவர் தெரிவிக்கையில், "என்னுடைய திட்டத்தில் பெரும் மாற்றங்கள் எதுவும் இருக்காது, தென் ஆப்பிரிக்காவிலும், உலகக் கோப்பையிலும் இந்திய அணியின் ஆட்டத்தை நான் பார்த்தேன், இந்திய வீரர்களுடன் நெருன்ங்கிப் பழகிய பிறகுதான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும். தேவைப்பட்டால் மட்டுமே மாற்றங்களைச் செய்வேன்" என்று கூறியுள்ளார் பிளெட்சர்.

  "நான் எதேச்சதிகாரம் செய்யக்கூடிய ஒரு இடத்தில் இல்லை. இந்திய அணியின் பயிற்சியாளராக செயலாற்றுவது ஒரு சவால். நான் கேரி கர்ஸ்டனிடமும் பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்சிடமும் பேசினேன். மகேந்திர சிங் தோனியிடமும் சிறிது நேரம் பேசினேன்." என்றார் பிளெட்சர்.

Thursday 12 May 2011

"சதையை' பார்க்கும் கிரிக்கெட் வீரர்கள்

புதுடில்லி: 
     "ஐ.பி.எல்., பார்ட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் தவறாக நடந்து கொள்கின்றனர். நடனப் பெண்களின் சதையை தான் பார்க்கின்றனர்,'' என, தென் ஆப்ரிக்க நடனப் பெண் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.பி.எல்., தொடரில் பார்வையாளர்களை மகிழ்விக்க, அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் மும்பை அணிக்கான போட்டிகளில் நடனம் ஆடுவதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்து 40 பெண்கள், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
     இரவில் போட்டிகள் முடிந்ததும் நடக்கும் பார்ட்டிகளில், நடக்கும் சம்பவங்கள் குறித்து கேபிரியல்லா (22) என்ற நடனப் பெண், சமீபத்தில் வெளியிட்ட "டுவிட்டர்' செய்தியில்,"" கிரிக்கெட் வீரர்கள் தகாத முறையிலும், அருவெறுக்கத் தக்கவகையிலும் நடந்து கொள்கின்றனர். இவர்கள் எங்களை பெண்களாக பார்ப்பதில்லை. வெறும் சதைப் பிண்டமாகத்தான் பார்க்கின்றனர்,'' என தெரிவித்து இருந்தார்.
     இப்படி "உண்மையை' வெளியிட்டதால், கடந்த வாரம் இவர் மும்பை அணியின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.  

இதுகுறித்து கேபிரியல்லா கூறியது:
 
     பொதுவாக பார்ட்டிகளின் போது, அனைத்து இடங்களிலும் காமிராக்கள் பொருத்தப்பட்டு, வீரர்கள் என்ன செய்கின்றனர் என்று கண்காணிக்கப்படுவார்கள். அப்படி இருந்தும் அவர்கள், எங்களை சுற்றித் தான் நின்று கொள்வார்கள். அவர்களை விட்டு நாங்கள் எங்கும் செல்ல முடியாது. மொத்தத்தில் எங்களை மாமிச பிண்டமாகத்தான் நடத்துகின்றனர். இதில் எந்தவொரு குறிப்பிட்ட வீரரையும் தெரிவிக்க விரும்பவில்லை. நாங்கள் சந்தித்த இந்திய வீரர்களில் தோனி, ரோகித் சர்மா இருவரும் எப்போதும், நாகரீகமுடன் நடந்து கொள்வார்கள்.
     இதைத்தான் எனது "டுவிட்டரில்' தெரிவித்தேன். ஆனால், என்னை தொடரில் இருந்து நீக்கிவிட்டனர். உண்மையில் என்ன தவறு செய்தேன் என்றே தெரியவில்லை. ஏதோ மிகப்பெரிய தவறு செய்த கிரிமினல் போல என்னை நடத்தினர். எனது தரப்பு நியாயம் என்ன என்பதை சொல்வதற்கு கூட வாய்ப்புத் தரவில்லை. இவ்வாறு கேபிரியல்லா தெரிவித்தார்.

Wednesday 11 May 2011

கங்குலி கலக்கல் -> புனே வாரியர்ஸ் அபார வெற்றி

ஐதராபாத்: 
     ஐ.பி.எல்., லீக் போட்டியில் மனிஷ் பாண்டேயின் அதிரடி கைகொடுக்க, புனே வாரியர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எட்டாவது தோல்வியை சந்தித்த டெக்கான் சார்ஜர்ஸ், முதல் அணியாக வெளியேறியது.
     ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின் 53வது லீக் போட்டி, ஐதராபாத்தில் நடந்தது. இதில் டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. ஏறக்குறைய இரு அணிகளும், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நிலையில், "டாஸ்' வென்ற டெக்கான் அணி கேப்டன் சங்ககரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
கங்குலி அறிமுகம்:
     நான்காவது ஐ.பி.எல்., தொடருக்கான ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட கங்குலி, கடந்த வாரம் புனே அணியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் கடந்த இரண்டு போட்டிகளாக களத்துக்கு வெளியே உட்கார்ந்திருந்த கங்குலி, நேற்று முதன் முதலாக களமிறங்கினார்.
ஆறுதல் ஜோடி:
     டெக்கான் அணிக்கு சிகர் தவான், ரவி தேஜா இணைந்து நல்ல துவக்கம் கொடுத்தனர். வாக் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த ரவி தேஜா, ரன்வேகம் குறையாமல் பார்த்துக்கொண்டார். ராகுல், பார்னல் ஓவரில் தலா ஒரு சிக்சர் அடித்து அசத்தினார் சிகர் தவான். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தபோது, சிகர் தவான் (24) யுவராஜ் சிங் சுழலில் சிக்கினார். அடுத்த சில நிமிடங்களில் ரவி தேஜாவும் (30) வீழ்ந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சங்ககரா (12) அணியை கைவிட்டு திரும்பினார். டேனியல் கிறிஸ்டியன் (10), மறுபடியும் ஏமாற்றினார்.
மார்ஷ் அபாரம்:
     போட்டியின் 19வது ஓவரை வீசிய மார்ஷ், டெக்கான் அணிக்கு "வில்லனாக' மாறினார். இதன் முதல் பந்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்த டுமினியை (30) வெளியேற்றினார். இதேஓவரின் 4, 5வது பந்தில் சன்னி சோகல், அமித் மிஸ்ரா இருவரையும் "டக்' அவுட்டாக்கி அதிர்ச்சி தந்தார்.
ஸ்டைன் 11 ரன்கள் எடுத்தார். டெக்கான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டும் எடுத்தது. சிப்லி (18), இஷாந்த் சர்மா (0) அவுட்டாகாமல் இருந்தனர். பவுலிங்கில் அசத்திய புனே அணியின் மார்ஷ் 4, யுவராஜ் சிங் 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடி துவக்கம்:
     போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கை துரத்திய புனே அணிக்கு ரைடர், மனிஷ் பாண்டே ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. ஸ்டைன் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ரைடர், அடுத்து இஷாந்த் சர்மாவையும் விட்டுவைக்கவில்லை. ரைடர்(35), பிரக்யான் ஓஜாவின் சுழலில் போல்டானார்.
பாண்டே அசத்தல்:
     இதற்குப் பின் ரன்குவிக்கும் பொறுப்பை, மனிஷ் பாண்டே தன் கையில் எடுத்துக் கொண்டார். டுமினியின் ஒரே ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த இவர், 49 ரன்கள் (42 பந்து) எடுத்து அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
நிறைவேறிய எதிர்பார்ப்பு:
     "அதிரடி' உத்தப்பா (1), அம்பயரின் தவறான தீர்ப்பில் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குலி, தனது தேர்வை நியாயப்படுத்தினார். அமித் மிஸ்ரா பந்தில் "சூப்பர்' சிக்சர் அடித்த இவர், ஸ்டைன், இஷாந்த் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பி நம்பிக்கை தந்தார். மறு முனையில் கேப்டன் யுவராஜ் சிங் (2) சொதப்பினார்.
கடைசி நேரத்தில் பெர்குசன், "ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, புனே வாரியர்ஸ் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு, 137 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
கடினமான நாள்
      புனே வாரியர்ஸ் அணியின் கங்குலி கூறுகையில், ""எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நேற்று தான் கடினமான நாள். ஏனெனில் கடந்த ஐந்து மாதங்களாக பேட்டிங் செய்யாத நிலையில், மிகவும் தன்னம்பிக்கையின்றி களமிறங்கினேன். இருப்பினும், இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

Tuesday 10 May 2011

பஞ்சாப் அணியிடம் பணிந்தது மும்பை!

மொகாலி: 
     ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப் பெரும் அதிர்ச்சி. நேற்றைய லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மும்பை சார்பில் 5 விக்கெட் வீழ்த்திய முனாப் படேலின் பந்துவீச்சு வீணானது.
   இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த 54வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற மும்பை கேப்டன் சச்சின் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
வல்தாட்டி ஏமாற்றம்:
     பஞ்சாப் அணி துவக்கத்தில் திணறியது. ஹர்பஜன் சுழலில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்த வல்தாட்டி அதிக நேரம் நீடிக்கவில்லை. இவர் 14 ரன்களுக்கு முனாப் வேகத்தில் வீழ்ந்தார். பின் கேப்டன் கில்கிறிஸ்ட், ஷான் மார்ஷ் இணைந்து அசத்தினர். குல்கர்னி ஓவரில் மார்ஷ் 2 பவுண்டரி விளாசினார். ரோகித் சர்மா பந்தில் கில்கிறிஸ்ட் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். மலிங்கா பந்தில் கில்கிறிஸ்ட்(28) அவுட்டானார். இதற்கு பின் முனாப் படேல் வேகத்தில் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 39 ரன்களுக்கு இழந்தது. 16வது ஓவரை வீசிய முனாப் இரட்டை "அடி' கொடுத்தார். 2வது பந்தில் மார்ஷ்(43) அவுட்டானார். 6வது பந்தில் டேவிட் ஹசி(0) வெளியேறினார்.
     
     குல்கர்னி வீசிய போட்டியின் 17வது ஓவரில் மன்தீப் சிங், தினேஷ் கார்த்திக் தலா ஒரு சிக்சர் விளாசி ஸ்கோரை உயர்த்தினர். மன்தீப் சிங்(8) ரன் அவுட்டானார். 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக்(31), ஹாரிசை(6) அவுட்டாக்கிய முனாப் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது.
விக்கெட் மடமட:
     சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு பிலிசார்ட் அதிரடி துவக்கம் தந்தார். இவர், பிரவீண் குமார் வீசிய முதல் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். தனது அடுத்த ஓவரில் சச்சினை(6) வெளியேற்றிய பிரவீண் திருப்புமுனை ஏற்படுத்தினார். இதற்கு பின் வந்தவர்கள் ஏனோதானோ என ஆடினர். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணிக்கு இம்முறை பஞ்சாப் பவுலர்கள் "செக்' வைத்தனர். பிலிசார்ட்(15), ரோகித்(5), சைமண்ட்ஸ்(8), ராயுடு(13), ஹர்பஜன்(12) ஏமாற்றினர். பார்கவ் பட் ஓவரில் போலார்டு(17), குல்கர்னி(2), முனாப்(0) வரிசையாக நடையை கட்டினர். மும்பை அணி 12.5 ஓவரில் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை பார்கவ் பட் வென்றார்.

ஆடுகள சர்ச்சை

புதுடில்லி: 
     "எந்த ஆடுகளத்தில் விளையாடுவது என்பதை, அதன் பராமரிப்பாளர் தான் முடிவு செய்வார். இதில், அணிகளுக்கு எந்த உரிமையும் இல்லை,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அதிரடியாக தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் சொந்த மண்ணான ஜெய்ப்பூரில் சமீபத்தில் நடந்த போட்டிகளில் கொச்சி 109, மும்பை 94, புனே 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. மும்பை அணி கேப்டன் சச்சின், ஆடுகளம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார்.
     இதனால் நேற்று முன்தினம், ஆடுகளம் மாற்றப்பட, சென்னை அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் வார்ன் கூறுகையில்,"" கடந்த நான்கு ஆண்டுகளாக விளையாடிய ஆடுகளத்தை விட்டுவிட்டு, திடீரென வேறு ஆடுகளத்தில் விளையாடுமாறு உத்தரவிட்டனர். இது தான் தோல்விக்கு காரணம்,'' என, கோபமாக தெரிவித்தார்.
இதுகுறித்து, ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடி, தனது "டுவிட்டரில்' கூறுகையில்,"" ஆடுகளம் மாற்றத்துக்கு பி.சி.சி.ஐ., செயலரும், சென்னை அணி உரிமையாளரும் சீனிவாசன் காரணமாக இருக்கலாம்,'' என, புதிய புயலை கிளப்பினார்.
     இந்த பிரச்னைக்கு தற்போது பி.சி.சி.ஐ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுபற்றி அது வெளியிட்ட அறிக்கையில்,"ஐ.பி.எல்., தொடர் துவங்கும் முன்பும், நடக்கும் போது அனைத்து மைதானங்களுக்கும் சென்ற பி.சி.சி.ஐ., ஆடுகள கமிட்டி, வேக மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டிற்கும் சமமாக ஒத்துழைக்கும் வகையில் தான் "பிட்ச்' இருக்க வேண்டும் என தெரிவித்தது. தவிர, இதைத் தேர்வு செய்வது அணிகளின் கையில் இல்லை. ஆடுகள தயாரிப்பாளர் மற்றும் கமிட்டி தான், எந்த "பிட்ச்' என்று முடிவு செய்யும்,' என, தெரிவித்துள்ளது.