Sunday 15 May 2011

சச்சினுக்கு விருது

     இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், "பாலி உம்ரிகர்' விருது வழங்கப்பட உள்ளது. பி.சி.சி.ஐ., சார்பில் வரும் மே 31ம் தேதி மும்பையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட்டில் சாதித்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. தவிர, 28 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி, உலக கோப்பை வென்றதையும் கொண்டாட உள்ளது.
 
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறியது:
 
     கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் சாதித்து வருபவர் இந்திய அணியின் சச்சின் (38). இவர் கடந்த பத்தாவது உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தார். தவிர, கடந்த ஆண்டில் பங்கேற்ற 10 டெஸ்ட் போட்டிகளில், ஒரு இரட்டை சதம், ஐந்து சதம் உட்பட மொத்தம் 1064 ரன்கள் எடுத்துள்ளார். 12 நாள் போட்டிகளில் ஒரு இரட்டைசதம் உட்பட 695 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு 2009-2010 ஆண்டில் சிறந்து விளங்கியதற்காக "பாலி உம்ரிகர்' விருது வழங்கப்படுகிறது. இதற்கான கோப்பையுடன், சச்சினுக்கு ஐந்து லட்ச ரூபாயும் தரப்பட உள்ளது.
 
   இத்துடன் ஜி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வரும் மே 27ல் வெளியாகும். இந்த விருது பெறுபவர்களுக்கு கோப்பையுடன், ரூ. 15 லட்சம் கிடைக்கும். இத்துடன் மனிஷ் பாண்டே, அபிமன்யு மிதுன் போன்ற பல வீரர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.

1 comment: