Sunday 15 May 2011

கெய்ல் "மழை" - பெங்களூரு வெற்றி

     ஐ.பி.எல்., லீக் போட்டியில் கிறிஸ் கெய்லின் அதிரடி கைகொடுக்க, பெங்களூரு அணி "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஐ.பி.எல்., தொடரில், தொடர்ந்து ஏழாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது பெங்களூரு அணி.
நான்காவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடக்கிறது. இதில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த போட்டியில் விராத் கோஹ்லியின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, காம்பிரின் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.பெங்களூரு அணியின் தில்ஷன் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க சென்று விட்டதால், பாமர்ஸ்பச் வாய்ப்பு பெற்றார்.

     பெங்களூரு அணிக்கு வழக்கம் போல காலிஸ், மார்கன் இணைந்து துவக்கம் தந்தனர். ஜாகிர் கானின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசிய அதிரடியாக துவக்கினார் காலிஸ். ஆனால் மார்கன் (2) சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. காலிஸ் தன்பங்குக்கு 17 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
நம்பிக்கை தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் காம்பிரும் (7) கைவிட, கோல்கட்டா அணி 30 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ரன்வேகம் குறைந்தது.
 
மழை குறுக்கீடு:
 
     இதன் பின் இணைந்த யூசுப் பதான், மனோஜ் திவாரி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. மிதுன், கெய்ல் பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார் யூசுப் பதான். 11 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது.
மீண்டும் போட்டி துவங்கிய போது 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. யூசுப் பதான் 36 ரன்கள் எடுத்து திரும்பினார். 13 ஓவரின் முடிவில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, 4 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி (19), பவுச்சர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
 
கெய்ல் "மழை":
 
     "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 13 ஓவரில் 102 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற, மாற்றப்பட்ட இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு, கெய்ல் பவுண்டரி மழை பொழிந்தார். பிரட் லீ வீசிய முதல் ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்து அசத்தினார். உனத்கட்டின் அடுத்த ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்கள் விளாசி மிரட்டினார். 12 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 38 ரன்கள் எடுத்தபோது, பிரட் லீ வேகத்தில் காலிசிடம் பிடிகொடுத்து திரும்பினார்.

     பாமர்ஸ்பச் 16 ரன்கள் எடுத்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராத் கோஹ்லி (15) நிலைக்கவில்லை. முகமது கைப்பும் (15), அருண் கார்த்திக் (1) விரைவில் அவுட்டாகினர். சவுரப் திவாரி (1) ரன் அவுட்டானார். கடைசியில் டிவிலியர்ஸ், "சூப்பர்" பவுண்டரி அடிக்க, பெங்களூரு அணி 12.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்து, "டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment