Saturday 14 May 2011

அதிகாரப்போக்கு எடுபடாது - பிளெட்சர்


     இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலாம் அணியாகவும், ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாம்பியனாகவும் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்த கேரி கர்ஸ்டனின் நிர்வாகத்திறமை மீது இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை அதிக மதிப்பு வைத்திருந்தது.இந்த நிலையில் அவர் திடீரென விலக, டன்கன் பிளெட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்து அணியை 2005ஆம் ஆண்டின் புகழ் பெற்ற ஆஷஸ் வெற்றிக்கு இட்டு சென்றார்.

     இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது பற்றி அவர் தெரிவிக்கையில், "என்னுடைய திட்டத்தில் பெரும் மாற்றங்கள் எதுவும் இருக்காது, தென் ஆப்பிரிக்காவிலும், உலகக் கோப்பையிலும் இந்திய அணியின் ஆட்டத்தை நான் பார்த்தேன், இந்திய வீரர்களுடன் நெருன்ங்கிப் பழகிய பிறகுதான் நான் ஒரு முடிவுக்கு வர முடியும். தேவைப்பட்டால் மட்டுமே மாற்றங்களைச் செய்வேன்" என்று கூறியுள்ளார் பிளெட்சர்.

  "நான் எதேச்சதிகாரம் செய்யக்கூடிய ஒரு இடத்தில் இல்லை. இந்திய அணியின் பயிற்சியாளராக செயலாற்றுவது ஒரு சவால். நான் கேரி கர்ஸ்டனிடமும் பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்சிடமும் பேசினேன். மகேந்திர சிங் தோனியிடமும் சிறிது நேரம் பேசினேன்." என்றார் பிளெட்சர்.

No comments:

Post a Comment